Monday, January 24, 2011

பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்

கவிஞர் ஆதித்தனின் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நிகழ்ந்தது. 'பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்' என்ற இந்நூல் ஏற்கெனவே கோவையில் இயக்குனர் சேரனின் தலைமையில் தகிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிஞர் மது வழங்கினார். அதாவது கவிஞர் மதுவர்மன் தொகுத்து வழங்கினார். மு.மயூரன் வரவேற்புரை செய்தார்.அது இலக்கியவாதிகளையும், இணையவாதிகளையும் இனிப்பாய் இணைத்தது. அண்ணன் சடாகோபன் அளவான அறிமுகவுரை நிகழ்த்தினார்.தேவராஜா அய்யா வளமான கருத்துரை நிகழ்த்தினார். அடியேனும் கருத்துரைத்தேன்.

கவிஞர் ஆதிக்கு, பாடலாசிரியர் ஆதிக்கு, எழுத்தாளர் ஆதிக்கு, பைத்தியகார ஆதிக்கு,ஆதிவாசி ஆதிக்கு, வனவாசி ஆதிக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். வீட்டுக்குள் பல்லியை கூட அனுமதிக்காத நகரத்து மனிதர்கள் இடையே, புழுவோடும், பூனையோடும், நாயோடும் கவிபாடும் ஆதியை ஆதிவாசி என்றதில் என்ன தவறு?

மரபின் மைந்தனான ஆதித்தன், புது கவிதையோடு புது மாப்பிள்ளை போல காதல் செய்திருக்கிறார். ஆனால் நெடு நாட்களாய் நவீன கவிதையோடு பங்காளி சண்டை போட்டு வருகிறார். இருந்தும் கவியில் தென்படும் படிமங்கள் விரைவில் இவர் பின்நவீன குடில் மாறும் முகாந்தரங்களை முன்னுரைக்கின்றன. நிலையாமை என்பது நிலைக்கும் தானே?

நூலில் இருந்து சில வரிகள் :

எம் குழந்தைகள்
தூக்க கலக்கத்திலேயே தூக்கிலிடப்பட்டன..
******************************

மிச்ச கதைகள் கோடியுள
மீள இன்னோர் இரவுதனில்
அச்சக்கரியை வான் பூசும்
அந்தப்போதிர் சொல்வேன் நான்
*************

வாழ்த்துக்கள் ஆதி

1 comment: