ஒரு சராசரி வாலிப பையனின் கனவில் பெண்கள் வருவது இயல்பு. சென்னையை விட்டு கணத்தூரத்தில் இருக்கும் என் கனவில் தோசை வருதுங்க! விதவிதமான தோசைகள். சென்னை நடுத்தர வர்கத்தின் Compulsary காலை சிற்றுண்டி தோசை தான். நான் தோசை மீது காதலோடு சென்னையை சுற்றி திரிந்துளேன்.
அண்ணா சாலையின் சரவணா பவன் நெய் தோசை
அம்மா சுடும் கோதுமை தோசை
எழும்பூர் மத்சயாவின் ஆசை தோசை (இனிக்கும்!)
தாம்பரம் வசந்த பவன் பொடி தோசை
டி.நகர் தட்டு கடை அஞ்சு ரூபா நைஸ் தோசை
வூட்லண்ட்ஸ் சாலை மட்டன் தோசை(தொட்டுக்க பாயா)
மெரினா லைட் ஹவுஸ் குப்பத்தின் கல் தோசை (அந்த அக்கா சொல்லும் வசனம் - 'வளரும் புள்ள நல்லா சாப்டனும் துரை..இன்னும் ரெண்டு சுடவா?').
நுங்கம்பாக்கத்தின் ஒவ்வொரு தோசை கடையோடும் எனக்கு தனி காதல் உண்டு
நமது பொருளாதாரத்திற்கு ஏற்ப, எந்த விலையில் வேண்டுமானாலும் தோசை கிடைக்கும். விசித்திரமான உண்மை என்னவென்றால் விலை குறைய குறைய சுவை அதிகரிக்கும்.
தோசை ஒரு ஜென் தத்துவம்.
முரண்களின் குழைமம்.
வட்டமாய் விரியும் கம்யூனிச கை ப்ரிதி.
கனவில் தோசை வருது செல்வா என்று அறை நண்பரிடம் புலம்பினேன். நாளைக்கு சுட்டு தருவதாய் சொன்னார். ரெடிமேட் மாவு எங்கே கிடைக்கும் என்று விசாரித்து வருகிறார்.
செல்வா சுட போகும் தோசைக்கு ரெடிமேட் சைட் டிஷ் என்ன?
ReplyDeleteruchi oorukai thaan!
ReplyDeletedai oru thosaikkaka blog poddu ketta muthal manusan neeya thaan irukkum....
ReplyDeleteamaa kanavila thosai mattum thaan vanthucha illai thosai sutta akkavum sernthu vanthangala???
ரெண்டும் தான் மச்சி..
ReplyDeletedei rascal... dosai-nnu sonnadhum unakku en nenappu varalaya da? shandala...
ReplyDeleteதோசை என்றால் மீசை அண்ணாச்சிக்கு அவ்வளவு ஆசையோ..
ReplyDelete-shadheeshan