Thursday, August 20, 2009

பிகருக்கு இலங்கையில் என்ன பெயர்?









ஒரே தமிழ் வெவ்வேறு நாடுகளின் திரிபில் இவ்வாறெல்லாம் மாறுகிறது.

இந்தியாவில் - இலங்கையில்
சாவி - திறப்பு
கதைப்போம் - பேசுவோம்
ஆம் - ஓம்
தேநீர் - தே தண்ணீர்
அப்புறம் - பிறகு
சீக்கிரம் - கெதியா
என்னங்க - இஞ்சேருங்கோ
வரைதல் - கீறுதல்
வந்தேன் - வந்த நான்
சுத்துறது - கிருகிறது
வருகையில் - வரேஇக்க
மப்பு - மப்பு
பிகர் - துண்டு,குட்டி
மிக பெரிது - ஆக பெரிது
புரியுதா? - விளங்குதா?

முக்கியமான ஓன்று : பிகர் என்ற வார்த்தை தமிழா என்று கேட்காதீர்கள்..

9 comments:

  1. நன்கு அவதானிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. வைத்தியர் அய்யாவின் வார்த்தைகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. ராச்மோகனுக்கு அங்க எத்தனை துண்டு?!

    PS: பிகர் தமிழா என்று தெரியாது...ஆனா அது மெட்ராஸ் பாஷை நைனா... கடல் கடந்து போனாலும் பல்லாவரத்தை மறக்க கூடாது இல்லையா :-)

    ReplyDelete
  4. துண்டா? பிட்டு துணி கூட இல்லிங்கோ !!

    ReplyDelete
  5. நான் நம்பல...

    ReplyDelete
  6. அப்பா இருக்கிறத என்னண்டு சொல்றது.. வண்டென்று சொல்லலாமா?

    ReplyDelete
  7. மயூரன்...நீங்கள் எனக்கு அந்த ரகசியம் சொல்லுங்கோ!

    ReplyDelete
  8. கிருகிருக்கிறது என்பது பொதுவான இலங்கைத் தமிழ் அல்ல. அது குறிப்பாக மட்டக்களப்புத் தமிழ். இலங்கைத் தமிழ் எனப் பொதுப்படையாகக் கூறப்படுவது யாழ்ப்பாணத் தமிழை.

    நீங்கள் மிக நுணுக்கமாக எல்லாச் சொற்களையும் கவனித்திருக்கிறீர்கள். கொழும்புத் தமிழில் ஃபிகருக்கு இன்னொரு சொல் இருக்கிறது தெரியுமா? “சைஸ்”!

    ReplyDelete