Monday, August 24, 2009

அழகு! எது அழகு!


எங்கள் நிறுவனம் எமக்கு தந்திருக்கும் வீடு ஒரு காட்டு பங்களா. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள், செடிக்கொடிகள் நிறைந்தவை. எனவே அணில்களின் சரணாலயமாய் மாறி போனோம் - வீடும் நாங்களும். அணில்கள் கொஞ்சி கொள்வதில் இருந்து காதல் செய்வது வரை அருகில் இருந்து கண்டு ரசிக்கும் வரம் வாய்க்க பெற்றோம். சில சமயம் பாம்புகள் அணில்களை வேட்டையாடுவதையும் பார்க்க நேரிடும்.
-
-
அணிலின் சிறப்பே அதன் பஞ்சுமிட்டாய் வால் தான். ஒரு அணில் பாதி அறுந்த வாலுடன் பரிதாபமாய் துணி காயும் கொடியில் விளையாடிக் கொண்டு இருந்தது. மற்றொன்று நீண்ட வாலுடன் திரிந்து கொண்டு இருந்தது. நாங்கள் பார்த்ததிலேயே நீண்ட வால் கொண்ட அணில்.
-
-
"இந்த அணில் பாருங்க செல்வா.. வாலோடு அழகா இருக்கு" என்றேன் நான்.
"இல்ல ராஜ்.. கொடியில இருக்கும் அணில், பாம்போடு சண்டை போட்டு பாதி வாலை இழந்து இருக்கலாமே? அந்த அனுபவம் தான் அழகு" என்றார் செல்வா.
-
-
முழுமை அழகல்ல.அனுபவமே அழகு.வாயடைத்து போனேன்.



3 comments:

  1. சத்தியமான உண்மை...

    ReplyDelete
  2. மிக விரைவில் அணில் பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்தனே..... அணிலோடு பழகலாம் வாங்க என்று தலைப்பு போடுங்க.......

    ReplyDelete