Thursday, January 21, 2010

கடலும் கடல் சார்ந்த வாழ்வும்

அண்மையில் கடலுக்குள் மூழ்கும் SCUBA diving செய்தேன். நீச்சலே தெரியாத என்னை கடலுக்குள் கொண்டு செல்ல அதிகமாகவே அஞ்சினார் பயிற்சியாளர். இறுதியில் நான், அவருக்கு தைரியம் கொடுத்து, கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. பாவம் அவர். குல தெய்வத்தை வேண்டிக்கொண்டே என்னுடன் வந்தார்.

மூச்சுவிட விசேட சுவாச குழாய், சிறப்பு நீச்சலுடை,Emergency devices,Fins, முக மூடி, பிரணவாயு சிலிண்டர் சகிதமாய், ஒரு விண்வெளி வீரர் போல கடலுக்குள் குதித்தேன். எத்தனை பொழுதுகள் கரையில் நின்று ரசித்த கடல், எத்தனை இரவுகள் குளிரில் நின்று சிலிர்த்த கடல், எத்தனை முறை அப்பாவின் கண்காணிப்பில் முட்டிவரை கால் நனைத்த கடல்... முத்தம் தந்து மூழ்கினேன்.

சூரியனின் கிரணங்கள் நழுவும் நடுகடலில், திடீரென என்னை சுற்றி ஆயிரம் வெள்ளி மீன்கள் கூட்டமாய் வட்டமடித்தபோது, பரவசத்தில் எனக்கு அழுகை வந்தது. நானும் கடலுக்குள் ஒரு நீர் துளியாய் மாறி போனேன்.

தரையை தொட்டு சிறிது மணல் எடுக்க எத்தனிக்கையில் , மொத்த மணலும் விர்ரென சீறி பறந்தது. அவை மணல் நிறத்தில் அசையாதிருந்த மீன்கள்.மறுபடியும் அழுகை.

பவள பாறைகளை தொட்டு பார்த்த அனுபவத்தை பகிர, என்னிடம் சரியான சொல்லாடல் இல்லை. அற்புதம்/சுவர்க்கம்/பனிக்குடம்/மரணம் - இதில் ஏதோ ஒன்றின் நீட்சி.

கடலுக்கடியில் பயமா இல்லையா? என்று அவள் கேட்டாள். பூமியில் வாழ தான் பயமாக உள்ளது, கடலுக்குள் பாதுகாப்பாகவே உணர்கிறேன். அவளிடம் சத்தியம் வாங்கினேன் - நான் இறந்தால் கடலுக்குள்ளே வீச சொல்லி.

5 comments:

  1. உங்கள் அந்த கெட்டப்ல பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கு! Took pictures??

    Sounds amazing. I should dive in some day as well.

    PS: I totally love the அவள் கேட்க போகும் 5 கேள்விகள் :P

    ReplyDelete
  2. will mail you those horrible photos(i look like kadal panni )

    ReplyDelete
  3. will take u oneday. im doing proffesional course in ocean diving...(intha degree-ya arrear illama mudikka try panraen)

    ReplyDelete
  4. oooh...i've never seen a kadal panni. I definitely want to see pictures!!

    and wow! i would feel real safe to go dive in with you. I'm in i'm in :)

    ReplyDelete
  5. "எத்தனை பொழுதுகள் கரையில் நின்று ரசித்த கடல், எத்தனை இரவுகள் குளிரில் நின்று சிலிர்த்த கடல், எத்தனை முறை அப்பாவின் கண்காணிப்பில் முட்டிவரை கால் நனைத்த கடல்... "
    உங்கள் வார்த்தைகளை ரசிக்கும் போதே எனக்குள்ளும் அந்த ஆர்வம் தலை எடுக்கிறது

    ReplyDelete