Monday, April 12, 2010

மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?

அங்காடி தெரு எனக்கு பிடித்திருந்தது. எனக்கும் என்பதே சரியான பிரயோகம். அதிகார மையத்தை நோக்கி தன் ஆள்காட்டி விரலை நீட்டும் துணிவும், தைரியமும் வசந்தபாலனுக்கு அதிகமாகவே உள்ளது. உயிரின் வெதுவெதுப்பு நிரம்பி வழியும் வசன உரையாடல்கள், ஜெயமோகனுக்கு மட்டுமே சாத்தியம். பாடல்கள் தாலாட்டுகின்றன . ஆனால் தாயின் சேலையால் கட்டப்பட்ட தூளி அல்ல - மாறாக, புது மனைவியின் புடவையால் கட்டப்பட்ட காதல் தூளி. பின்னணி இசை ஏமாற்றம் மட்டுமே தருகிறது. கதாநாயகியின் lipstick பூசாத இதழ்கள், அரை நொடியில் ஆயிரம் கதை சொல்லும் கண்கள், நெஞ்சை கனக்க செய்யும் அந்த விபத்து, அனைத்துமே யதார்த்தம்.


ரகசிய அறையும், அடி உதையும் சரவணா ஸ்டோர்ஸில் மட்டுமல்ல, பல பொறியியல் கல்லூரியில் கூட இருப்பது தான். நான் படித்த கல்லூரியிலும் இருந்தது. அங்கே அடிவாங்கும் அரிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. லட்சக்கணக்கில் பணம் கட்டிய பாவத்துக்காக அந்த இடத்தை மலம் மிதித்த சம்பவம் போல் கடந்து போனேன். ஒரு மோசமான சமூகத்தின்அடையாளமான இந்த காட்டுமிராண்டி கல்லூரிகளையும், அண்ணாச்சிகளையும் வசந்தபாலன் போன்றதோழர்களே தோலுரிக்க வேண்டும்.

குறிப்பு : பதிவின் தலைப்பு பாரதிதாசனிடம் கடன் வாங்கியது

3 comments:

  1. அ'ரி'ய வாய்ப்பு!

    ReplyDelete
  2. அரிந்துவிட்டேன்

    ReplyDelete
  3. "தாயின் சேலையால் கட்டப்பட்ட சேலை அல்ல மாறாக புதுமனைவியின் புடவையால் கட்டப்பட்ட காதல் தூளி" அடிக்கடி காணமல் போய் எங்களை பட்டினி போடா வேண்டாம் தொடர்ந்து எழுதுமாறு தாளமையுடன் வேண்டுகிறேன் .....மீரா......

    ReplyDelete