Tuesday, April 13, 2010

ரெட்டைசுழி

சிகரமும் இமயமும் இணையும் ரெட்டைசுழி திரைப்படம் வெகு விரைவில் வெளி வர இருக்கிறது. இதன் இயக்குனர் தாமிரா ஒரு சிறந்த சிறுகதையாளர். பல்வேறு இதழ்களில் கதையாடி உள்ளார். தாமிராவின் எழுத்து குவியும் முனை, குழந்தமை தான் என்பது வாசித்தவர்களுக்கு விளங்கும். பல் முளைக்காத பொக்கை வாய் பிள்ளை கன்னத்தை கடித்து எச்சி முத்தம் தருவதை போல், சிறுகதைகள் சொல்வார். கலா மாஸ்டர் அடிக்கடி சொல்லும் chemistry இவரின் கதைமாந்தர்களுக்குள் கவிதையாய் இருக்கும்.

பர்வதமலையில் ஒரு ராஜகுமாரி என்ற சிறுகதை தாமிராவின் படைப்புலக உச்சம் என்றே சொல்லலாம். நல்ல உணர்வாளர். பின் நவீன எழுத்தில் தீவிர முரண் கொண்டவர். நல்ல மனிதர். கதைகளின் மூலத்தை முதுமக்கள் தாழியின் விழுமியங்களில் இருந்து எடுப்பவர். இலக்கிய பட்டறையில் இருந்து கனவு பட்டறைக்கு குடி பெயர்ந்திருக்கும் இயக்குனரை வாழ்த்தவேண்டியது எம் கடமை. இவரோடு நேரில் பழகும் யாவருக்கும் இயக்குனர் பாலாவின் நினைவு வருவது இயல்பு. 'யோவ் நீ ஏன் என்னை மாதிரியே பேசுற? என்னை மாதிரியே இருக்க? ' என்று பாலாவே இவரிடம் கேட்டார்.

தாமிராவின் சிற்சில வரிகள்:
அழிந்து கிடக்கும் வனங்களுக்கு மத்தியில் புதிதாக ஒரு குழி வெட்டினேன். என்றேனும் சிறகுகளின் காயங்களோடு, வாழ்வின் நிதர்சனம் புரிந்து திரும்பும் பட்டாம்பூச்சிக்காக வேணும் ஒரு ரோஜாச்செடி நட வேண்டும்.

1 comment: