Saturday, May 8, 2010

ஒளவையாரின் காதல் கடிதம்


பழம்பெரும் நடிகையான K.B.சுந்தராம்பாள் தனது கணவரும், நாடக உலகின் தனிப்பெரும் நாயகனுமான கிட்டப்பா அவர்களுக்கு எழுதிய மடல்.

கரூர்,நவம்பர் 1928

அன்புள்ள பதி அவர்களுக்கு,
அடியாள் அனேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொல்லியபடி நடப்பதாக தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவு தான். வளைக்காப்பு இடவேண்டுமென்று தங்களிடமும், தங்களின் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை. என்னைப் பற்றி கவனிக்க நான் ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? தாங்கள் அங்கும் நான் இங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்க போகிறீர்கள்?தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதவேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன். எது எப்படி இருந்தாலும் தாங்கள் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் உங்களை திட்டமாட்டேன். கிட்டமாளைத்தான் கேட்பேன் என்று அவளிடம் சொல்லுங்கள். அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். மாதமும் ஆய்விட்டது. தங்களுக்கு தெரியாத விஷயமில்லை. அவ்வளவு தான் சொல்லலாம். நேரில் வாருங்கள் உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்!

இப்படிக்கு,
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தராம்பாள்.
நன்றி : எழுத்தாளர் சோழநாடன்

No comments:

Post a Comment