Tuesday, July 27, 2010

நிழல் சொரியும் தருவின் வேர்

எல்லோர் மனதிலும் ஒரு மரம் வேர் விட்டுள்ளது. அம்மன் கோயில் வேப்பமரம், பள்ளிகூட பூச்சி மரம், ஏரிக்கரை பனைமரம், கம்பிளி ஊரும் முருங்கை மரம், புளியங்காய் அடிக்கப் போய் கால் உடைத்த மரம், கண்ணாம்பூச்சிக்கு ஆள் ஒளியும் அரச மரம், ஊஞ்சலாடும் ஆல மரம், இப்படி எத்தனையோ.

என்னுள் இரு தென்னை மரங்கள் உள்ளன. ஐந்து வயதில், அதிலிருந்து எலுமிச்சை அளவில் ஒரு தென்னங்காய் என் உச்சி மண்டையில் சுர்ரென விழுந்தது. உடனே ஆப்பிள் விழுந்த நியூட்டன் போல என் ஞான கண் திறந்து , ஒரு யோசனை உதித்தது.

தரை எங்கும் அது போல் சிதறி கிடந்த காய்கள் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் பழைய கூடையில் ஒளித்து வைத்தேன். என்றேனும் அவை வளர்ந்து பெரிய இளநீராகும் என்று நம்பினேன்.ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஆரம்பித்த காய்கள், மூன்றாம் வகுப்பு வரை சென்றது.

ஒரு நாள் அப்பா அனைத்தையும் பார்த்து விட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீசி எரிந்து விட்டார். பிறகு வெகு காலம் அவை எங்கோ தூரத்தில் நான் இல்லாமல் அனாதையாக வளர்வதாய் நினைத்து புலம்புவேன்.

மரங்களுக்கு ஏன் அநாதை விடுதிகள் இல்லை என்றெல்லாம் யோசிப்பேன். அனைத்திலும் கொடுமையான விஷயம் பிறகு நடந்தது தான். அது என்னவென்றால்..
.

.

உதிர்ந்த காய் இளநீராய் மாறாது என உணர்ந்து கொள்ளும்படி நான் வளர்ந்துவிட்டேன்...

2 comments:

  1. வள்ர்வதால் கிடைக்ககூடிய ஒரே நன்மை உனை போன்ற நண்பர்கள் மட்டுமே......

    ReplyDelete