வெளியே மழை
உள்ளே நீ
விட்டுவிட்டு நனைகிறது மனசு.
----------------------------------------------------

பைத்தியக்கார மழை.
உனை தொடமுடியா துயரத்தில்
ஜன்னல் கம்பியில்
தூக்கில் தொங்கியது.
---------------------------------------------------

மழை பொழியாத சாலையில்
நீ நடந்து வந்தாய்.
யாரோ பேசிக் கொண்டார்கள்
'மழை வருது போல' என்று.
-----------------------------------------------------

வீட்டில் நின்று
மழையை நீ ரசித்தாய்.
வீதியில் நின்று
மழை உனை ரசித்தது.
---------------------------------------------------
உனக்கென்ன?
மழையில் நனைந்துவிட்டு
மறைந்துவிட்டாய்.
பாவம் மழை
அதற்கு ஒரே காய்ச்சல்.
--------------------------------------------------
காற்றின் ஈரப்பதம்
அதிகரிக்கிறது.
அநேகமாய் அவள்
வந்துக் கொண்டிருக்கிறாள்.
---------------------------------------------------
"குளிருது டா"
"...."
"hug me"
"....."
"டேய்! hug மட்டும் பண்ணு.திருடா"
---------------------------------------------------
மழை அவளின் வாசகன்.
சாரல் தவணைகளில்
சந்தா செலுத்துகிறது.
----------------------------------------------------
மழைக்கும் அவள் மேல்
காதல் போல.
வீடுவரை வந்து வழிகிறது.
----------------------------------------------------
மழை கண்காட்சியில்
தொலைந்த சிறுவன் நான்.
அவள் பேர் சொல்லி அழுகிறேன்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//மழைக்கும் அவள் மேல்
ReplyDeleteகாதல் போல.
வீடுவரை வந்து வழிகிறது. //
good one
வீட்டில் நின்று
ReplyDeleteமழையை நீ ரசித்தாய்.
வீதியில் நின்று
மழை உனை ரசித்தது.
nice anna