Sunday, August 2, 2009

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு





தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி முடிந்து வெகு காலம் ஆகிறது.(அடுத்து சுட்டிகளும் வந்தாச்சு) உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்த பெருமை விஜய் தொலைக்காட்சியை சாரும். அரை குறையாய், தெரிந்தவற்றை வைத்து கொண்டு முக்கி முனுங்கி பேசி, இறுதி நான்கு பேரில் ஒருவனாய் வந்தேன்.

ஓவிய சுற்று,கவிதை சுற்று , மொழி பெயர்ப்பு சுற்று உள்ளிட்ட அனேக சுற்றுகளை குறித்து இணையத்தின் இயங்குவெளியில் விவாதிக்கப்படுவதாய் தங்கை வேதா அடிக்கடி சொல்லுவாள். ஆனால் இலங்கையின் போரில் இயக்கத்துக்கும் ராணுவத்திற்கும் இடையே அப்பாவி தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இறந்தப்போது ஏற்ப்பட்ட அயர்ச்சியின் காரணமாய் என்னால் இணையத்தின் பக்கமே வரமுடியவில்லை.

இடை செருகல்: அந்த கோர புகைப்படங்களை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.

நேற்று கூகிள்-இல் 'தமிழ் பேச்சு ராஜ்மோகன்' என்று தட்டிய போது அனேக நண்பர்கள் என்னை குறித்தும் பதிவிட்டிருக்கும் செயலை கண்டேன். அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.

chennaionline.com/film/TV/Dec08/12article100.
tamil.techsatish.net/file/tamil-petchu-engal-mutchu-11/ (பின்னூட்டங்கள் நெகிழ வைத்தன )
nareshin.wordpress.com/page/4/
groups.google.sm/group/muththamiz/.../54068e10be274b94
groups.google.nr/group/anbudan/.../5e56b33665221179
தமிழ் எங்கள் பேச்சு! தமிழ் எங்கள் மூச்சு! அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.

1 comment: