Sunday, September 6, 2009

கடைசி கோப்பை மது



அடித்து நொறுக்கப்பட்ட எங்கள் வீடுகளுக்காக

இந்த கோப்பையை உயர்த்துகிறேன்.

வேதனை மிகுந்த வாழ்வுக்காக,

வலி மிகுந்த மேனிக்காக,

காட்டி கொடுத்த தோழர்களின்-

பொய் உறைந்த இதழ்களுக்காக,

இரக்கமற்ற உலகுக்காக, மேலும்

காக்க மறந்த அனைத்து கடவுளுக்காகவும்

கடைசி கோப்பை மதுவை உயர்த்துகிறேன். சியர்ஸ்..

- அன்ன அக்மதொவ் (1889 - 1966)

ரஷ்ய கவிதாயினி

3 comments:

  1. நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்களா?!

    ReplyDelete
  2. மூல பிரதியின், ஆங்கில பதிப்பின் - தமிழாக்கம் எனது.

    ReplyDelete
  3. பொய் "உறைந்த" இதழ்களுக்காக - :-)

    ReplyDelete