Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Saturday, May 8, 2010

பாரதிதாசன் எழுதிய picnic பாடல்



யாத்திரை போகும்போது

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ருபாய் கைக் கொள்க யாத்திரைக்கே.
-புரட்சிக்கவிஞர்

ஒளவையாரின் காதல் கடிதம்


பழம்பெரும் நடிகையான K.B.சுந்தராம்பாள் தனது கணவரும், நாடக உலகின் தனிப்பெரும் நாயகனுமான கிட்டப்பா அவர்களுக்கு எழுதிய மடல்.

கரூர்,நவம்பர் 1928

அன்புள்ள பதி அவர்களுக்கு,
அடியாள் அனேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொல்லியபடி நடப்பதாக தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவு தான். வளைக்காப்பு இடவேண்டுமென்று தங்களிடமும், தங்களின் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை. என்னைப் பற்றி கவனிக்க நான் ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? தாங்கள் அங்கும் நான் இங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்க போகிறீர்கள்?தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதவேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன். எது எப்படி இருந்தாலும் தாங்கள் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் உங்களை திட்டமாட்டேன். கிட்டமாளைத்தான் கேட்பேன் என்று அவளிடம் சொல்லுங்கள். அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். மாதமும் ஆய்விட்டது. தங்களுக்கு தெரியாத விஷயமில்லை. அவ்வளவு தான் சொல்லலாம். நேரில் வாருங்கள் உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்!

இப்படிக்கு,
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தராம்பாள்.
நன்றி : எழுத்தாளர் சோழநாடன்

Sunday, January 24, 2010

நிர்வாணமாய் - ஒரு மதுக்கோப்பை

சிறுவயது முதலே நான் பெருந்தீனிக்காரன்.எனது ஆறு வயதில், பதினாறு பூரி தின்பேன்.கடந்த இருபது வருடங்களாய், இரவு உணவு 12 மணிக்கு தான். ஜுரம் வந்தால் 10 மணிக்குள் உணவருந்த முயற்சி செய்வேன். ஆனால் மிக சரியாக ஒன்பது மணிக்கு மது அருந்த தொடங்கி விடுவேன். பிறகு பெண்களை குறித்து ரசித்து, ரசித்து பேசுவேன். எந்த பெண்ணை பார்த்தாலும் எனக்கு இச்சையே தோன்றும். மலேசியா , தாய்லாந்து கிளிகளை ராஜபோகத்தில் அனுபவித்தேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும், ஒளிவு மறைவும் இல்லை. நான் வாழ்ந்த வாழ்வை பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் வாழ்ந்திருக்க முடியாது.ஆனால் அனைத்து ஆட்டமும் முடிய போகிறவையே. இளைஞர்களை கண்டால் ஆடி ஆடி முடிய போகிறவர்களாய் தான் தோன்றுகிறது.
(அர்த்தமுள்ள இந்து மதம்)
6000 கவிதைகள், 5000 திரைப்படங்களின் திரைப்பாடல்கள், நூற்று கணக்கான நூல்கள், ஆறு திரைப்படங்களின் தயாரிப்பு ,தேசிய விருது, சாகித்திய அகடெமி விருது, 2 மனைவிகள், 13 மழலைகள்,கோடிக்கணக்கான ரசிகர்கள், கொஞ்சம் மது, நிறைய தமிழ்.....கவியரசர் கண்ணதாசன்.அரிதாரம் பூசாத அவதாரம். பிறர் வாசிக்க, வார்த்தைகளை மட்டுமல்ல - தன் வாழ்க்கையையும் தந்தவன்.

Friday, September 4, 2009

சல்மான் ருஷ்டி - பின் தொடரும் மரணத்தின் இசை





அல்லாஹும் மப்தஹஸ்லே அப்வாப ரஹ்மதிக்க
பொருள்: இறைவா! உன் அருள் வாயில்களை எனக்கு திறந்து விடு.


1947 - மும்பையில் சல்மான் ருஷ்டி பிறப்பு

1964 - பாகிஸ்தானுக்கு இடம் பெயர்தல்

1968 - நாடகத்துறையில் படு தோல்வி

1971 - இங்கிலாந்தில் விளம்பரத் துறையில் எழுத்தர் பணி

1975 - முதல் நாவல் தோல்வி

1980 - நள்ளிரவு குழந்தைகள் வெளியீடு

1981 - புக்கர் பரிசு! ஏராளமான விருதுகள்! பணம்! புகழ்!

1981 - இந்திரா காந்தி நெருக்கடி தருகிறார்

1983 - ஷேம் நாவல் வெளியீடு

1988 - சர்ச்சைக்குரிய சாத்தானின் பாடல்கள் வெளியீடு.


இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நாவல் தடை செய்யப்படுகிறது.ஈரான் கொமேனி ருச்டிக்கு மரண தண்டனை விதிக்கிறார்.செல்லுமிடமெல்லாம் மரணம் பின்னணி இசை வாசித்துக்கொண்டு உடன் வருகிறது.

இந்த வன்முறை பூமியில் தங்களின் எழுத்துக்காக, கருத்துக்காக, கொள்கைக்காக யாரோ ஒருவன் போராடிக்கொண்டே இருக்கிறன்.


அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹையா

பொருள்: இறைவா!உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன். மீண்டும் உயிர் பெறுகிறேன்.