Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Friday, July 30, 2010

சக்தியின் வரம் தரும் குபேரன்

பல்வேறு நேயர்கள் ஆசைப்பட்ட வரங்களை வாரி வழங்கிய குபேரன் விடை பெறுகிறான்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Season 2வில் சந்திப்போம்.

Monday, June 14, 2010

நில நடுக்கம் with Tsunami alert



நில நடுக்கம் வந்த போது எனது கடற்கரையோர அடுக்கக தொகுதியின் ஐந்தாம் தளத்தில் இருந்து வெளியேறிய அனுபவம்.


கையில் எடுத்துக்கொண்டு ஓடியது
1.செல்பேசி + மின்னேற்றி
2.ஊடக அடையாள அட்டை
3.கடவுசீட்டு
4.கல்வி சான்றிதழ்கள்

ஓடும் வழியில் செய்தது
1.அண்டை வீட்டாரை கூவி எழுப்பியமை
2.செய்தி பிரிவுக்கு தகவல் பகிர்ந்தமை
3.ஒவ்வொரு தளப்பலகனியின் ஊடே கடல் பொங்கலை அவதாநித்தமை
4.ஆங்கில திரைப்பட வசனங்களை கூறியமை (ஓடுங்க..அது நம்மள நெருங்கிடுச்சு..control rooom..over)


செய்ய நினைத்து செய்யாமல் விட்டது
அப்பாவிடம் love you சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். கடைசி வரைக்கும் சொல்ல வில்லை. சொல்ல போவதும் இல்லை. இடைவெளியின் மௌனங்களில் உறைந்திருக்கிறது அன்பின் வெப்பம்..

Tuesday, February 23, 2010

ஸ்ரீதர் பிச்சையப்பா மரணம்

போய் வருகிறேன் என்று அவர் கையசைத்த போது, நிரந்தரமாய் பிரிய போகிறார் என்று தெரியாமல் போனது. வாழ்வின் அனைத்து வலிகளையும் ரசித்த ஒரு மாமனிதன், மரணத்தை முத்தமிட்டுலான். தன்னை தானே சிறுக சிறுக சிலுவையில் அறைந்து கொண்ட அவனுக்கு, மரணம் ஒரு விடுதலையே.

ஸ்ரீதர் பிச்சையப்பா - தாயகத்தின் தன்னிகரில்லா கலை ஆளுமை. இவர் இறுதியாக பங்கெடுத்த படைப்பு "வந்தியத்தேவன் சரித்திரத்தொடர்" . அதில் அவரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடைசி அங்கம் எதிர்வரும் வெள்ளி இரவு பத்து மணிக்கு.

இனி நான் யாரிடம் பிக்காசோ குறித்தும் பிரமிள் குறித்தும் வாதிட முடியும்?

Friday, February 12, 2010

இலங்கை - இன்னும் சில


இந்தியாவில் - இலங்கையில்
துடைப்பம் - தும்புத்தடி
கொசு - நுளம்பு
உட்காரவும் - இருக்கவும்
காப்பீடு - காப்புறுதி
மூலமாக - ஊடாக
உலக கோப்பை - உலக கிண்ணம்.

(ஓவியம் - சீகிரியா கோட்டை)

Tuesday, February 9, 2010

அகதி முகாம்

அகதி முகாம்..
மழையில் வருகிறது
மண் வாசனை. (அறிவுமதி)
__________________________________________
துப்பாக்கி முனையில் துரத்தடிக்கப்பட்டு, பரிசோதனை கூடத்தின் பரிதாப எலிகளை போல் இரும்பு வேலிக்குள் முடக்கப்பட்ட மனிதர்களின் நாசி, யதேச்சையாய் பொழிந்த மழையால், கிளறப்பட்ட மண் வாசனையால் என்ன பாடு படும்? வரைபடங்களில் தெரியும் தேசிய எல்லைகள், நிஜத்தில் இருக்குமா என்று என் பள்ளிக்கூட பால்யத்தில் பலமுறை வியந்திருக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் அந்த கோடுகள் எம் சகோதிரிகளின் அறுக்கப்பட்ட தாலிகளாக கூட இருக்கலாம்.
.
எல்லைக்கோடும், வறுமைக்கோடுமாய் திரியும் நாங்கள் - கோடுகளால் நிரம்பி கிடக்கும் வரி குதிரைகள். போர் என்னும் சாத்தான் எங்கள் கழுத்தை கடித்து சுடுரத்தம் தோய்ந்த தசைகளை புசிக்கிறது. கஞ்சிக்கே வழியில்லாத எங்களிடம், சீருடை சிவன்கள் பிள்ளைக்கறி கேட்கிறார்கள்.
.
உலகெங்கும் திறக்கப்பட்ட அவல முகாம்களை குறித்து தொடர் பதிவுகளை துவங்குகிறேன். இந்த பதிவுகள் எந்த இயக்கத்துக்கும் சார்ந்து செல்லாமல், மனிதம் தொலைத்த விழுமியங்களை குறித்தே செல்லும் என்று நம்புகிறேன்.

_____________________________________________________
முகாம் பெயர் - மரிச்ஜ்ஹன்பி
நாடு - மேற்கு வங்கம், இந்தியா
காலம் - 1978



வங்கத்தின் போர் மேகம், பாகிஸ்தான் பிரிவினையின் போதே சூல் கொண்ட ஒன்றே. அப்போது அகதிகளாய் உருவானவர்கள் இரண்டு இடங்களில் அடைத்து வைக்க பட்டார்கள். அதில் ஓன்று தான் உப்பு கடல் சூழ் தீவான மரிச்ஜ்ஹபி (மரிச்சபி) .
.
முகாம்களில் ராணுவம் மட்டுமல்ல, காவல் துறையும் உள்ளூர் வாசிகளும் கூட அகதிகளை கொடுமை படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.
.
(வலிகள் தொடரும்)

Thursday, October 22, 2009

இலங்கை வார்த்தைகள் - தோதின் தூது


















வானிலை அறிக்கை - வளிமண்டல அறிக்கை
சீக்கிரமா - வெள்ளன
அன்பே - ஐசே
காட்டு வாசி - வனாந்திரி
அலுவலகம் - திணைக்களம்
நீதிபதி - நீதவான்
பெரிய - பாரிய
ரவுடி - ஆயுததாரி
கடுங்காவல் சிறை தண்டனை - கடூழிய சிறை தண்டனை
வளர்ச்சி - அபிவிருத்தி
பேக்கு - தோது

Thursday, October 1, 2009

இலங்கை வழக்கு மொழி

இன்னும் சில


குறும்பு - பிரளி / குழப்படி
ராகிங் - பகடி வதை
விசாரணை கைது - விளக்க மறியல்
வக்கீல் - சட்டத்தரணி
குறைக்கப்பட்ட - மட்டுப்படுத்தப்பட்ட
புகார் - முறைப்பாடு
தொல்லை/இம்சை/ரோதனை/ரப்ச்சர்/ - கரைச்சல் (மலையாளத்தில் கரைச்சல் என்றால் அழுகை என்று பொருள்)
தொப்பை - வண்டி.

Sunday, August 30, 2009

இலங்கை தமிழ் வார்த்தைகள் இன்னும் சில

இந்தியாவில் - இலங்கையில்

பையன் - பொடியன்
காய்கறி - மரக்கறி
ஜலதோசம் - தடிமல்
விசாரணை கைது - விளக்கமறியல்
முடியாது - இயலாது
ஓட்டுனர் - சாரதி
ங்கொய்யாலே - ங்கொய்யாலே

Sunday, August 23, 2009

தேசம் - தேசப்பற்று - தேன்மிட்டாய் - தேங்காய் சட்னி


இலங்கையில் இரண்டு விதமான மக்கள் இருக்கிறார்கள்.
ஒரு வகையினர் என்னை போல் தேசத்தை நேசிக்கிறவர்கள்.
மற்றொரு வகையினரோ தேசத்தை நேசிக்காதவர்கள்.
-ராஜபக்சே ( மாண்புமிகு ஜனாதிபதி).


தேசப்பற்று என்பது தேசத்தின் எல்லை கோட்டுக்குள் இருக்கும்
மண்ணை நேசிப்பது அல்ல.
மாறாக மக்களை நேசிப்பதும்- அவர்களின்
விடுதலைக்காக போராடுவதுமே.
-சமீர் ரே சொவ்த்ரீ (வங்க புலவன்).

who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.
That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.
-பாப்லோ நெருடா

Thursday, August 20, 2009

பிகருக்கு இலங்கையில் என்ன பெயர்?









ஒரே தமிழ் வெவ்வேறு நாடுகளின் திரிபில் இவ்வாறெல்லாம் மாறுகிறது.

இந்தியாவில் - இலங்கையில்
சாவி - திறப்பு
கதைப்போம் - பேசுவோம்
ஆம் - ஓம்
தேநீர் - தே தண்ணீர்
அப்புறம் - பிறகு
சீக்கிரம் - கெதியா
என்னங்க - இஞ்சேருங்கோ
வரைதல் - கீறுதல்
வந்தேன் - வந்த நான்
சுத்துறது - கிருகிறது
வருகையில் - வரேஇக்க
மப்பு - மப்பு
பிகர் - துண்டு,குட்டி
மிக பெரிது - ஆக பெரிது
புரியுதா? - விளங்குதா?

முக்கியமான ஓன்று : பிகர் என்ற வார்த்தை தமிழா என்று கேட்காதீர்கள்..