
அண்ணா சாலையின் சரவணா பவன் நெய் தோசை
அம்மா சுடும் கோதுமை தோசை
எழும்பூர் மத்சயாவின் ஆசை தோசை (இனிக்கும்!)
தாம்பரம் வசந்த பவன் பொடி தோசை
டி.நகர் தட்டு கடை அஞ்சு ரூபா நைஸ் தோசை
வூட்லண்ட்ஸ் சாலை மட்டன் தோசை(தொட்டுக்க பாயா)
மெரினா லைட் ஹவுஸ் குப்பத்தின் கல் தோசை (அந்த அக்கா சொல்லும் வசனம் - 'வளரும் புள்ள நல்லா சாப்டனும் துரை..இன்னும் ரெண்டு சுடவா?').
நுங்கம்பாக்கத்தின் ஒவ்வொரு தோசை கடையோடும் எனக்கு தனி காதல் உண்டு
நமது பொருளாதாரத்திற்கு ஏற்ப, எந்த விலையில் வேண்டுமானாலும் தோசை கிடைக்கும். விசித்திரமான உண்மை என்னவென்றால் விலை குறைய குறைய சுவை அதிகரிக்கும்.
தோசை ஒரு ஜென் தத்துவம்.
முரண்களின் குழைமம்.
வட்டமாய் விரியும் கம்யூனிச கை ப்ரிதி.
கனவில் தோசை வருது செல்வா என்று அறை நண்பரிடம் புலம்பினேன். நாளைக்கு சுட்டு தருவதாய் சொன்னார். ரெடிமேட் மாவு எங்கே கிடைக்கும் என்று விசாரித்து வருகிறார்.