Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, November 17, 2009

காலம் என்றொரு








காலம் சத்தமின்றி
என்னை சிறுக சிறுக
விழுங்கிக் கொண்டிருக்கிறது.
மலை பாம்பின்
மழை கால இரை போல்.

யானரிந்த சொற்கள் யாவும்
உருமாறிவிட்டன.
தலை - வழுக்கை
வயிறு - தொப்பை
சோறு - சர்க்கரை
home work - over time
பாம்பின் பசி கருணையற்றது.
இரைகளிடம் இரக்கம் காட்டுவதில்லை

Tuesday, October 6, 2009

ஆனந்த குயில் பாட்டு


புதிதாய் குடியேறிய வீட்டின்
பழைய மர நாற்காலியை
தட்டி தட்டி பார்த்தேன் -
சத்தமாய் கேட்டது...
மரமாய் நின்ற போது
கூடு கட்டி வாழ்ந்த குஞ்சுகளின்
ஆனந்த குயில் பாட்டு.

Sunday, September 6, 2009

கடைசி கோப்பை மது



அடித்து நொறுக்கப்பட்ட எங்கள் வீடுகளுக்காக

இந்த கோப்பையை உயர்த்துகிறேன்.

வேதனை மிகுந்த வாழ்வுக்காக,

வலி மிகுந்த மேனிக்காக,

காட்டி கொடுத்த தோழர்களின்-

பொய் உறைந்த இதழ்களுக்காக,

இரக்கமற்ற உலகுக்காக, மேலும்

காக்க மறந்த அனைத்து கடவுளுக்காகவும்

கடைசி கோப்பை மதுவை உயர்த்துகிறேன். சியர்ஸ்..

- அன்ன அக்மதொவ் (1889 - 1966)

ரஷ்ய கவிதாயினி

Tuesday, July 7, 2009

விருந்து


வர தட்சனை தந்து செய்யப்படும்
திருமணத்தின் விருந்தில் பரிமாறப்படுகிறது
பெண்ணை பெற்றவனின்
ரத்தமும் சதையும்.

குளம்

நிலாவில் குளம்
இருக்கிறதா?-தெரியாது.
என் ஊர் குளத்தில் நிலா இருக்கிறது.