Monday, November 12, 2012

கேட்டதில் வெடித்தது

சென்னையில்
குழந்தைகள் பட்டாசு வெடிக்கிறார்கள்
சிவகாசியில்
பட்டாசுகள் குழந்தைகளை வெடிக்கின்றன

Saturday, September 8, 2012

அவசரமாய் கிளம்பி வந்துவிட்டேன்

அவசரமாய் கிளம்பி வந்துவிட்டேன். அலைபேசி கதறலில் நனைந்துவிட்டு, குளியலறையில் கொஞ்சம் அழுதுவிட்டு, கடலுக்கும் காற்றுக்கும் முத்தமிட்டு.. தாய்நாடு திரும்புவதாய் எண்ணி இங்கு வந்துவிட்டேன். வந்தபின்னும் ஒரு அகதி மன நிலையிலேயே அலைந்து திரிகிறேன். கற்றுக்கொண்டவையும் பெற்றுக்கொண்டவையும் பல. சுட்டு கொண்டு நொந்தவையும் பல.

பாதியில் விட்டு வந்த நாடகம் - தம்பி கிருஷ் இருக்கிறான். பார்த்து கொள்வான்.
எழுத மறந்த பாடல் - இன்னொரு ராகம் பிரஜீவ் தருவான்
உடையாது விட்ட குடுவை - பிரஷாந்த் ஒவ்வொரு கோப்பையிலும் என் பேர் சொல்லுவான்.
பொக்கிஷமான புத்தக குவியல் - அஞ்சல் செய்வாள் கவீதா

எனினும் என்ன
யாரால் சரி செய்ய கூடும்?
கூடறுத்த என் சிறகின் முறிவை?

அத்தான்கள்

ஜி நாகராஜன் காலத்தால் நிலைத்திருக்கும் எழுத்தாளன். இவன் காலத்தில் எல்லோரும் பாரத தேசமென்று தோள் கொட்டிய போதும், இவன் பரத்தையாரின் அத்தான்கள் குறித்து தேள் கொட்டியவன். 'குறத்தி முடக்கு' இவரது ஆக சிறந்த படைப்பு. மற்றொரு நாவலான 'நாளை மற்றுமொரு நாளே' அதிகம் சிலாகிக்க படுகிறது. அடியேன் வாசிப்பில் இரு நாவலுமே ஒரே கதையின் இரு பாகங்கள் போல தோற்ற மயக்கம் கொடுக்கின்றன.ஒரு கதை வைத்து இரு நாவல் எழுத படலாம். ஆயின் ஒரே எழுத்தாளனின் இரு நாவலில் ஒரே கதை இருப்பது ஒரு மோசடி இல்லையா?

மீண்டும் வலை

நெடு நாள் கழித்து மீண்டும் வலை வீச வருகிறேன்.. இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய பின் , இப்போது காலம் கொஞ்சம் மாறி இருக்கிறது. இனியேனும் அடிக்கடி பதிவிட வேண்டும்.முயல்கிறேன்.

Wednesday, August 31, 2011

அரசாங்க இசை விழா

இலங்கை அரசாங்க இசை விழாவில், 2010ம் வருடத்தின் சிறந்த பாடல் வரிகளுக்கான 'திறமை சான்றிதழை' அடியேன் வென்றுள்ளேன். தேசிய அளவில் கிடைத்த அங்கீகாரம் ஊக்கம் அளிக்கிறது .'கேட்கிறாய் அன்பே' பாடலை எழுத வாய்ப்பு தந்த பிரஜீவ், பாடிய பிரதீப், கலை கலாசார திணைக்களம், நலன் விரும்பிகள் யாவருக்கும் நன்றி.

கேட்கிறாய் அன்பே எந்தன் இதயத்தை
பார்கிறேன் அதில் உந்தன் உருவத்தை...

Tuesday, August 16, 2011

அவன் இவன்

அன்பு இளவல் கிரிஷின் வலைப்பூவில் என்னை குறித்த சில பகிர்வுகள். வாசிக்க சொடக்கவும் http://natchathiraveedhiyil.blogspot.com/2011/08/blog-post.html

நன்றி

Wednesday, August 3, 2011

விருது
இந்த வருடத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது அன்பு நண்பன் சித்தனுக்கு கிடைத்திருக்கிறது. இது துவக்கம் மட்டுமே. இனி தான் சித்து விளையாட்டே. வாழ்த்துக்கள் தோழா. நன்பேண்டா..

Saturday, June 11, 2011

Thanks : Colombo university, Tamil union
,uhr;Nkhfd.; rf;jpg; gz;giyapd; gpugy;akhd fiyQh;. rpdpkhtpd; jhf;fj;jhy; eyptile;J NghapUf;Fk; ehlfj; Jiwapd;>El;gkhd jsq;fspy; ,aq;Fk; ,sk; ,af;Fdh;. ,th; fijfs; xt;nthd;Wk; fhw;wiyapy; itf;fg;gLk; ntw;wpf; fy;ntl;L.

nghd;dpapd; nry;td; ehtiyAk; gy rhpj;jpuj; jfty;fisAk; Nrh;j;J ,th; cUthf;fpa ‘khtPud; te;jpaj;Njtd’;>thndhyp tuyhw;wpy; khngUk; ntw;wpfz;l rhpj;jpuj; njhluhFk;. Mrpa gRgpf; xypgug;G $l;likg;gplk; rh;tNjr rpwe;j ehlfkhf ,J ghpe;Jiuf;fg; gl;Ls;sJ. rhpj;jpuj; njhlhpd; ntw;wpiaj; njhlh;e;J rhfrj; njhluhk; ‘mNugpa ,uTfis’ kf;fSf;F toq;fp tUfpwhh;. NkYk; ngz;zpa tpLjiyia Kd;itf;Fk; ‘kfhy\;kp’ GJikj; njhliu vOjp ,af;fp tUfpwhh;. xU gf;fk; rhpj;jpuk; rhfrk; GidAk; ,th; kWgf;fk; jf;fhspj; jpNal;lh;>nul;ilthy; Nghd;w eifr;Ritr; rpj;jpuq;fisAk; jPl;b tUfpwhh;. gy;NtW ghly;fisAk;> Fwpapirf; ftpijfisAk; vOjpAs;shh;.

nfhOk;Gj; jkpo;r; rq;fj;jpd; ,yf;fpaf; $l;lq;fspy; ftpij fij Fwpj;J ,th; Mw;wpa ciufs;>kq;fh Kof;fkha; epiy ngw;wit. gy;NtW vOj;jhsh;fspd; gilg;GfisAk; gFg;gha;T nra;J fUj;Jiu toq;fpAs;shh;. fhjypNahL Rw;w Ntz;ba gUtj;jpy; fij nrhy;ypfNshLk; ftpQh;fNshLk; Rw;wpj; jphpfpwhh;.


khw;Wf; fUj;Jf;F kjpg;gspf;Fk; ,tuJ tpthj epfo;r;rpahd rhpah- jtwh? LMRB jug;gLj;jypy; gy Mz;Lfsha; Kjyplj;jpy; cs;s epfo;r;rpahFk;. Clfj;jpy; kf;fSf;F nghOJ Nghf;Fk; gilg;Gfs; kl;Lky;yhJ mth;fisg; gOJghh;f;Fk; gilg;Gfis cUthf;fp tUfpwhh;.

jdf;Ff; fpilf;Fk; ve;j tpUJk; jdf;fhdJ my;y> fiyg;grpNahL Rw;wpj; jphpAk; fhdf thrpfs; ahtUf;Fkhd mq;fPfhuk; vd;fpwhh; ,uhr;Nkhfd.;

தமிழ் கலைக் காவலன்
கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம், எனக்கு கௌரவ விருது வழங்கி உள்ளார்கள் . இதை போன்ற அங்கீகாரம் மென்மேலும் உழைக்க ஊக்கத்தை தருகிறது. "எனக்கு கிடைத்திருக்கும் விருது, எனக்கானது மட்டுமல்ல.கதை, கவிதை, காவியம், மண், மானம்,நீதி,விடுதலை யாவற்றின் மீதும் தீரா காதலோடு திரியும் கானகவாசிகள் யாவருக்குமான அங்கீகாரமே இந்த விருது"

விருது : தமிழ் கலைக் காவலன் (ஊடகம்)

கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மன்றம், சக்தி நிர்வாகம்,சக நண்பர்கள், நேயர் நெஞ்சங்கள்,நலன் விரும்பிகள் - யாவருக்கும் நன்றி

Sunday, March 20, 2011

"I have spent my days in stringing and unstringing my instrument."

Poets convey a timeless message. They are often key witness to history’s great
political and social changes. Their writings inspire us to build lasting peace in our
minds, to rethink relations between man and nature and to establish humanism
founded on the uniqueness and diversity of peoples. This is a difficult task, requiring the participation of all, whether in schools, libraries or cultural institutions. To quote the poet Tagore, the 150th anniversary of whose birth will be celebrated this year, "I have spent my days in stringing and unstringing my instrument."

Irina Bokova,
Director-General of UNESCO
Message for World Poetry Day
21 March 2011

Monday, January 24, 2011

பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்

கவிஞர் ஆதித்தனின் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நிகழ்ந்தது. 'பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்' என்ற இந்நூல் ஏற்கெனவே கோவையில் இயக்குனர் சேரனின் தலைமையில் தகிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிஞர் மது வழங்கினார். அதாவது கவிஞர் மதுவர்மன் தொகுத்து வழங்கினார். மு.மயூரன் வரவேற்புரை செய்தார்.அது இலக்கியவாதிகளையும், இணையவாதிகளையும் இனிப்பாய் இணைத்தது. அண்ணன் சடாகோபன் அளவான அறிமுகவுரை நிகழ்த்தினார்.தேவராஜா அய்யா வளமான கருத்துரை நிகழ்த்தினார். அடியேனும் கருத்துரைத்தேன்.

கவிஞர் ஆதிக்கு, பாடலாசிரியர் ஆதிக்கு, எழுத்தாளர் ஆதிக்கு, பைத்தியகார ஆதிக்கு,ஆதிவாசி ஆதிக்கு, வனவாசி ஆதிக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். வீட்டுக்குள் பல்லியை கூட அனுமதிக்காத நகரத்து மனிதர்கள் இடையே, புழுவோடும், பூனையோடும், நாயோடும் கவிபாடும் ஆதியை ஆதிவாசி என்றதில் என்ன தவறு?

மரபின் மைந்தனான ஆதித்தன், புது கவிதையோடு புது மாப்பிள்ளை போல காதல் செய்திருக்கிறார். ஆனால் நெடு நாட்களாய் நவீன கவிதையோடு பங்காளி சண்டை போட்டு வருகிறார். இருந்தும் கவியில் தென்படும் படிமங்கள் விரைவில் இவர் பின்நவீன குடில் மாறும் முகாந்தரங்களை முன்னுரைக்கின்றன. நிலையாமை என்பது நிலைக்கும் தானே?

நூலில் இருந்து சில வரிகள் :

எம் குழந்தைகள்
தூக்க கலக்கத்திலேயே தூக்கிலிடப்பட்டன..
******************************

மிச்ச கதைகள் கோடியுள
மீள இன்னோர் இரவுதனில்
அச்சக்கரியை வான் பூசும்
அந்தப்போதிர் சொல்வேன் நான்
*************

வாழ்த்துக்கள் ஆதி

Saturday, January 15, 2011

வெள்ளை

பொங்கலோ பொங்கல்... சக்தி தொலைக்காட்சியில் வழைமை போல் இன்றும் 'சிறப்பு நேரடி நிகழ்ச்சி' செய்தேன். தீபாவளி, வருட பிறப்பு, பொங்கல் என்று ஏதேனும் பண்டிகை வந்தால், பாழடைந்து இருண்டு கிடக்கும் வீட்டை வெள்ளையடித்து அழகு பார்பது போல, என்னை வைத்து நிகழ்ச்சி செய்வது வாடிக்கை ஆகிவிட்டது.

நகைச்சுவை தென்றல் லியோனியின் பட்டிமன்றத்தில் பேச 2008இல் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. நானும் நண்பர் தேவக்கோட்டை ராமநாதனும் போட்டி போட்டு ஒப்பனை செய்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த லியோனி, 'என்ன தம்பிகளா.. வெள்ளை ஆயிட்டீங்களா?' என்றார். 'நாங்க வெள்ளையாவுறதா.. மேக்கப் மென் கை தான் கருப்பாச்சு' என்றேன். சிரித்தார்.

சிறு துளி பெரு வெள்ளம்

இன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கின் சொந்தங்களுக்காக அனைவரும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதே தருணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வியப்பை தருகிறது. மச்சான் 2012ல உலகம் அழிய போகுது என்றான் நண்பன். அப்படியோர் அழிவு வந்தால் கடைசி பாடலாய் எதை என் நிகழ்ச்சியில் இசைக்கலாம் என்று யோசித்து வருகிறேன்.

Friday, November 26, 2010

இனி ஒரு விதி செய்வோம்

உலக வானொலி சக்தி தனது பன்னிரெண்டாவது ஆண்டின் நிறைவு விழாவை பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாடியது. என்பதை விட கொண்டாடினோம் என்ற பதமே சரி. இதை முன்னிட்டு பன்னிரண்டு கொள்கைகளை பிரகடனப்படுத்தினோம். மக்களின் மகத்தான ஆதரவும் அன்பும் தொடரும் என்ற நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்த போர் பூமியில் ஒரு தமிழ் ஊடகத்தை நடத்தும் சவால் எமக்கு பிடித்தே இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் சக்தியாக தொடர்ந்து பணியாற்றுவோம்.இனி ஒரு விதி செய்வோம்

கிழித்துப்போடு

தோழர் சித்தனின் 'கிழித்துப்போடு' நூல் வெளியீடு சிறப்பாக கிழிந்தது. மக்களிசை வித்தகர்கள் தப்படித்து கிழித்தார்கள்.தலைமை அதிதிகள் மேடையில் பாவனை நூலின் போலி அட்டையை கிழித்தார்கள். மாணவ செல்வம் ருத்ர தாண்டவம் ஆடி கிழித்தார்.வீரகேசரியின் ஆசிரியர் சித்தன் என்ற எழுத்தாளனை கிழித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் சித்தனின் 'எழுத்து' பேசும் ஆன்மீக கோட்பாடுகளை கிழித்தார். நயவுரை வழங்கிய நான் கேள்விகளின் திரைகளை கிழிக்க முயன்றேன். விழாவின் இறுதியில் காமன் கூத்து மேடையேறி கிழிந்தது.