என்னை யாரேனும் அடிக்கடி பரிசோதனை செய்கிறார்கள். நான் கைகளை மேலே உயர்த்தி நிற்கிறேன். அவர்களின் சந்தேக சீழ் படிந்த கரங்கள் என் மேனியெங்கும் மேய்கிறது. என் பெயர் கேட்கிறார்கள். எங்கே இருந்து வருகிறேன், எங்கேப் போக எத்தனிக்கிறேன் என்றெல்லாம் வினவுகிறார்கள். என் அடையாள அட்டையை சோதிக்கிறார்கள். அதிலிருக்கும் நிழற்படத்தையும், என்னையும் மாறிமாறி உற்று நோக்குகிறார்கள். நான் ஒப்புமை பிழையாதிருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். நான், நான்தானா என நானே ஐயுறுகிறேன். உலகம் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும்படி நிச்சயமற்றதாய் இருக்கிறது.
இது ரொம்ப பழய கத
ReplyDelete