Friday, October 8, 2010

ஆகல!

வணக்கம் தாயகத்தில் கனாவும்,ஓசியும் 'நேயர்களே, எங்கள் அறிவிப்பாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?' என்று கூவியதை தொடர்ந்து குவிந்துப்போன நேயர் கேள்விகளில், என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் எனது பதில்களும்.

கேள்வி : உங்கள் வயது என்ன? லட்சியம் என்ன?
பதில் : வயது நாளுக்குநாள் குறைந்துக்கொண்டே போகிறது. லட்சியம் கூடிக்கொண்டே போகிறது

கேள்வி : ஒரு பக்கம் புலவர் போல் கவி பாடுகிறீர்கள், மறுப்பக்கம் நகைச்சுவையில் கலக்குகிறீர்கள். எப்படி?
பதில் : அங்கதம் என்பது தமிழர்களின் நாவில் நடனமாடும் இயல்பான ஓன்று. நற்றமிழும் நகைச்சுவையும் ஒட்டாமல் பிறந்த ரெட்டை குழந்தைகள்.

கேள்வி : ஓராண்டு நிறைவை நோக்கி வந்தியத்தேவன் வெற்றி நடைப் போடுகிறது. அடுத்து என்ன? எதிர்ப்பார்ப்புகள் எகிறுகின்றன!
பதில் : அந்த எதிர்ப்பார்ப்புகளை பத்திரமாய் வைத்திருங்கள். சரித்திர பயணத்தை தொடர்ந்து, மற்றுமொரு சாகச பயணம் காத்திருக்கிறது.

கேள்வி :உங்கள் பூர்விகம்?
பதில் : தாத்தா கண்டி. அப்பா தலைமுறையோடு இந்தியாவிற்கு இடம்பெயர்தல்.நான் பிறந்தது, வளர்ந்தது, மலர்ந்தது எல்லாமே சிங்கார சென்னை. தற்போது வாழிடம் கொழும்பு. வருங்காலம் யாருக்கு தெரியும்?

கேள்வி : உங்கள் குடும்பம்?
பதில் : ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு அக்கா புருஷன், ஒரு அக்கா குழந்தை. அப்பாவும் திருமணமானவர்!அம்மாவும் திருமணமானவர்! அக்காவுக்கும் திருமணமாகிவிட்டது! எனக்கு இன்னும் ஆகல!

1 comment:

  1. எனக்கு இன்னும் ஆகல!don't worry anna ஆகும்

    ReplyDelete