அவசரமாய் கிளம்பி வந்துவிட்டேன். அலைபேசி கதறலில் நனைந்துவிட்டு, குளியலறையில் கொஞ்சம் அழுதுவிட்டு, கடலுக்கும் காற்றுக்கும் முத்தமிட்டு.. தாய்நாடு திரும்புவதாய் எண்ணி இங்கு வந்துவிட்டேன். வந்தபின்னும் ஒரு அகதி மன நிலையிலேயே அலைந்து திரிகிறேன். கற்றுக்கொண்டவையும் பெற்றுக்கொண்டவையும் பல. சுட்டு கொண்டு நொந்தவையும் பல.
பாதியில் விட்டு வந்த நாடகம் - தம்பி கிருஷ் இருக்கிறான். பார்த்து கொள்வான்.
எழுத மறந்த பாடல் - இன்னொரு ராகம் பிரஜீவ் தருவான்
உடையாது விட்ட குடுவை - பிரஷாந்த் ஒவ்வொரு கோப்பையிலும் என் பேர் சொல்லுவான்.
பொக்கிஷமான புத்தக குவியல் - அஞ்சல் செய்வாள் கவீதா
எனினும் என்ன
யாரால் சரி செய்ய கூடும்?
கூடறுத்த என் சிறகின் முறிவை?
பெருமதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு
ReplyDeleteநீங்கள் என்னிடம் பார்த்துக்கொள்ள சொல்லி கட்டளையிட்டு சென்ற நீங்கள் தவமிருந்து பெற்ற நாடக செல்வத்தை நீங்கள் போன மறு நிமிடமே தொடும் அருகதை இல்லதவனாக்கப்பட்டுவிட்டேன். தொழுநோய் பிடித்த தாய் குழந்தையை தொட முடியாமல் தூரத்தில் இருந்து தவிப்பதை போல தவிக்கின்றேன். யார் யாரோ செல்வந்த அதிகாரம் படைத்த பலர் இப்போது அந்த குழந்தையை வளர்க்கின்றார்கள் வாடகை தாய்களாக மாறி ,
சரி நன்றாக வளர்ப்பார்கள் என்று நம்பி ஒதுங்கினால் அந்த குழந்தை சிரிப்பதைக்கூட அடியோடு நிறுத்திவிட்டது. உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போன தோல்வியை வெட்கித்தலை குனிந்து ஒத்துக்கொள்கிறேன் ( இதற்கு நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்கிறேன் ) ...தயவு செய்து அந்த குழந்தைக்கு உங்கள் உஷ்ணத்தை கொடுங்கள் இல்லையேல் அகிலமே அண்ணாந்து பார்க்கவேண்டிய அந்த சோழ தேசத்து குழந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றாலும் கொன்றுவிடுவார்கள் ....பணிவுடன் உங்கள் தம்பி
இதுக்கு பிறகு நடந்தவை பல.. என்னா சலசலப்பு ! விடுங்க பாஸ் .. கூல்
Deleteஅந்த சோழ தேசத்து இளவரசனை உருவாக்கும் வளர்க்கும் தகுதி உங்களை தவிர வேறு யாருக்கு இருக்க முடியும் ????
ReplyDeleteஇதுக்கு பிறகு நடந்தவை பல.. என்னா சலசலப்பு ! விடுங்க பாஸ் .. கூல்
Deleteக்ரிஷ்
ReplyDeleteகடல் தாண்டி தேசத்தின் குரலை பறை சாற்றியவர்கள் எம்மவர்கள்
மாண்டுபோனாலும் தங்கள் கடமை தவறாதவர்கள்
சொல்லப்போன
சோழ பரம்பரையின் செல்லக்குழந்தைகள்
அவர்கள் கைபிடித்து தவழ நினைக்கும்
உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கவலை
உணர்வோடு உயிரையும் தமிழுக்காய் கொடுக்கும் குடும்பத்தில்
ஒரு பிள்ளை ராஜ் மோகன் என்றால்
மற்றவர்களையும் தட்டிக்கொடுத்து தான்
தன்மானத்தமிழன் கடல் தாண்டியிருப்பான்
இந்தளவும் எதற்க்கு
சோழ குழந்தை இளவரசனாய் முடிசூடும் போது
முக்காடு போடதயாராகும்
முடிந்தால் மனதை மாற்றி கொடிபறக்கும் போது
அண்ணார்ந்து பார்க்கலாம் காத்திரும் தோழரே