கொழும்பு தமிழ் சங்கத்தின் இலக்கிய களத்தில், வெள்ளிக்கிழமை(12:11:10) அடியேன் உரையாற்ற இருக்கிறேன். காலம் அனுமதித்தால் அவசியம் கலந்துக்கொள்ளுங்கள்
இடம் : கொழும்பு தமிழ் சங்கம்
காலம் : வெள்ளிக்கிழமை 12:11:2010
நேரம் : மாலை 6 மணி
தலைமை : திரு S.எழில் வேந்தன், தலைவர், கொழும்பு தமிழ் சங்கம்
உரை :"தொலைந்து போன தமிழ் நூல்கள் "-இராச்மோகன் ஆறுமுகம்,சக்தி வானொலி
Thursday, November 11, 2010
Friday, October 29, 2010
செம்மொழி விழா
மன்னார் செம்மொழி விழா மிக சிறப்பாக நிகழ்ந்தது. இலக்கிய அரங்கம், ஆய்வரங்கம், நூலரங்கம், இசைஅரங்கம் என்ற பகுப்புகளின் ஊடே செம்மொழியின் சிறப்பை நிலைநிறுத்தினர். எந்த விதமான அரசியல் சார்புத்தன்மையும் இல்லாமல், தனி நபர் துதிபாடல் இல்லாமல் , மொழி மட்டுமே பிரதானமாய் வைத்து விழா நடத்தியமை கூடுதல் சிறப்பு.நடனம், நாடகம், பட்டி மண்டபம், கவியரங்கம், பேச்சுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் என்று மன்னார் மண்ணே திருவிழா கோலம் பூண்டது.தமிழ்நேசன் அடிகளாருக்கும், சிவகரன் அவர்களுக்கும், மக்கள் காதர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். காயப்பட்ட களத்திலே தமிழே மருந்து, கவி தேடும் விழிகளுக்கு தமிழே மருந்து.
Friday, October 8, 2010
ஆகல!
வணக்கம் தாயகத்தில் கனாவும்,ஓசியும் 'நேயர்களே, எங்கள் அறிவிப்பாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?' என்று கூவியதை தொடர்ந்து குவிந்துப்போன நேயர் கேள்விகளில், என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் எனது பதில்களும்.
கேள்வி : உங்கள் வயது என்ன? லட்சியம் என்ன?
பதில் : வயது நாளுக்குநாள் குறைந்துக்கொண்டே போகிறது. லட்சியம் கூடிக்கொண்டே போகிறது
கேள்வி : ஒரு பக்கம் புலவர் போல் கவி பாடுகிறீர்கள், மறுப்பக்கம் நகைச்சுவையில் கலக்குகிறீர்கள். எப்படி?
பதில் : அங்கதம் என்பது தமிழர்களின் நாவில் நடனமாடும் இயல்பான ஓன்று. நற்றமிழும் நகைச்சுவையும் ஒட்டாமல் பிறந்த ரெட்டை குழந்தைகள்.
கேள்வி : ஓராண்டு நிறைவை நோக்கி வந்தியத்தேவன் வெற்றி நடைப் போடுகிறது. அடுத்து என்ன? எதிர்ப்பார்ப்புகள் எகிறுகின்றன!
பதில் : அந்த எதிர்ப்பார்ப்புகளை பத்திரமாய் வைத்திருங்கள். சரித்திர பயணத்தை தொடர்ந்து, மற்றுமொரு சாகச பயணம் காத்திருக்கிறது.
கேள்வி :உங்கள் பூர்விகம்?
பதில் : தாத்தா கண்டி. அப்பா தலைமுறையோடு இந்தியாவிற்கு இடம்பெயர்தல்.நான் பிறந்தது, வளர்ந்தது, மலர்ந்தது எல்லாமே சிங்கார சென்னை. தற்போது வாழிடம் கொழும்பு. வருங்காலம் யாருக்கு தெரியும்?
கேள்வி : உங்கள் குடும்பம்?
பதில் : ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு அக்கா புருஷன், ஒரு அக்கா குழந்தை. அப்பாவும் திருமணமானவர்!அம்மாவும் திருமணமானவர்! அக்காவுக்கும் திருமணமாகிவிட்டது! எனக்கு இன்னும் ஆகல!

Monday, October 4, 2010
possesiveness
ஆண் பெண் உறவின் அகசிக்கல் புதிரானது. இந்த நொடி உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ இருவர் அதீத அன்பால் ரத்தம் சிந்திக் கொண்டு இருக்கலாம். காதலர்களை தன்னுடைமை வெறிக் கொள்ள செய்கிறது.நட்புகளையும்.
தனக்கானது தன்னுடையது மட்டுமே என்று உரக்க கூவி அடம்பிடிக்கிறது அன்பு. அடைபட்டே கிடக்க குஞ்சு தவிக்கிறது. காலம் ஓட்டை உடைத்து விடுகிறது.இவை இரண்டுக்கும் இடையே நிகழும் தொடர் போராட்டமே உறவின் உறைநிலை உண்மை போல் தோன்றுகிறது.

செம
இன்றைய மனிதனின் சொல்வளம் ஒரு வார்த்தைக்குள் முடிந்து விடுகிறது. ஊரில் மழை 'செமையா' கொட்டுது. கொடைக்கானல் காணுலா செமையா இருந்தது. செம அருவி டா. செம பொண்ணு டா. செம மேட்ச் டா. செம படம். செம பாட்டு.
ஒரு புது இடத்தை கண்டவுடன் அதை மனதுக்குள் முழுமையாய் வாங்க முயற்சிக்காமல், புகைப்படம் எடுக்கவே பிரயத்தனப் படுகிறோம். அதுவும் வதனநூல் வெளியீடு செய்ய. விளைவு செமையாக இருக்கிறது.
இருபது ஆண்டுகள் முன் தமிழ் சமூகத்திற்கு நிழற்பட கருவி இவ்வளவு பரிச்சயமில்லை. நாடோடிக் கதைகள் ஊடாக, நிலாச்சோறு புனைவுகளாய், ரகசிய கடிதமாய்,சொல்லாறு பாய்ந்தது.இன்றோ காண் பதிவுகள் யாவுக்குமான வாய்ப்புகள் கைப்பேசியிலேயே இருக்கிறது. சொல்லின் இருப்பை செல் திருடிக்கொண்டு இருக்கிறது.

Thursday, September 23, 2010
கொழும்பின் குரல்
என்னை யாரேனும் அடிக்கடி பரிசோதனை செய்கிறார்கள். நான் கைகளை மேலே உயர்த்தி நிற்கிறேன். அவர்களின் சந்தேக சீழ் படிந்த கரங்கள் என் மேனியெங்கும் மேய்கிறது. என் பெயர் கேட்கிறார்கள். எங்கே இருந்து வருகிறேன், எங்கேப் போக எத்தனிக்கிறேன் என்றெல்லாம் வினவுகிறார்கள். என் அடையாள அட்டையை சோதிக்கிறார்கள். அதிலிருக்கும் நிழற்படத்தையும், என்னையும் மாறிமாறி உற்று நோக்குகிறார்கள். நான் ஒப்புமை பிழையாதிருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். நான், நான்தானா என நானே ஐயுறுகிறேன். உலகம் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும்படி நிச்சயமற்றதாய் இருக்கிறது.
Wednesday, September 8, 2010
ஈழம்
ராணுவ விமானத்தில் ஈழம் சென்றேன். ஒரு வாரம் தங்கினேன்.இன்று தான் கொழும்பு திரும்பினேன்.நாசி நெடுக யாழ் மண்ணின் வெப்பம் கொப்பளிக்கிறது.விரைவில் நண்பனுக்கு மடல் எழுத வேண்டும்.
Wednesday, August 25, 2010
அவளுக்கு பேர் அடைமழை
வெளியே மழை
உள்ளே நீ
விட்டுவிட்டு நனைகிறது மனசு.
----------------------------------------------------
பைத்தியக்கார மழை.
உனை தொடமுடியா துயரத்தில்
ஜன்னல் கம்பியில்
தூக்கில் தொங்கியது.
---------------------------------------------------
மழை பொழியாத சாலையில்
நீ நடந்து வந்தாய்.
யாரோ பேசிக் கொண்டார்கள்
'மழை வருது போல' என்று.
-----------------------------------------------------
வீட்டில் நின்று
மழையை நீ ரசித்தாய்.
வீதியில் நின்று
மழை உனை ரசித்தது.
---------------------------------------------------
உனக்கென்ன?
மழையில் நனைந்துவிட்டு
மறைந்துவிட்டாய்.
பாவம் மழை
அதற்கு ஒரே காய்ச்சல்.
--------------------------------------------------
காற்றின் ஈரப்பதம்
அதிகரிக்கிறது.
அநேகமாய் அவள்
வந்துக் கொண்டிருக்கிறாள்.
---------------------------------------------------
"குளிருது டா"
"...."
"hug me"
"....."
"டேய்! hug மட்டும் பண்ணு.திருடா"
---------------------------------------------------
மழை அவளின் வாசகன்.
சாரல் தவணைகளில்
சந்தா செலுத்துகிறது.
----------------------------------------------------
மழைக்கும் அவள் மேல்
காதல் போல.
வீடுவரை வந்து வழிகிறது.
----------------------------------------------------
மழை கண்காட்சியில்
தொலைந்த சிறுவன் நான்.
அவள் பேர் சொல்லி அழுகிறேன்
Monday, August 9, 2010
முட்டை

அமெரிக்காவில் எண்ணெய் கிணறு வெடித்தது. பாதிக்கப்பட்ட பறவைகளுக்காக பல குரல்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு இரண்டு மாதத்தில் நீதி கிடைத்தது. இதே தருணம்,போபால் விஷ கசிவால் தாலி அறுந்த இந்திய ஏழை தாய்மார்களுக்கு நீதி கிடைக்க இருபத்தி ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. நாம் ஏழைகளின் மண்ணில் பாலூட்டியாக பிறக்காமல், பசிபிக் கரையில் பறவை போல் முட்டை இட்டிருக்கலாம். வாழ்க இந்திய நீதி துறை.
Wednesday, August 4, 2010
நேர வறுமை
எல்லோர்க்குமான வானம். பொதுவாய் சுழலும் பூமி. யாவருக்குமான வாழ்வு. இருந்தும் திருவிழாவில் வாங்கிய பச்சை பலூனை போல் காலம் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அடங்க மறுக்கும் குழந்தையின் அழுகையாய், என் நேரவறுமையின் புலம்பல் நீளுகிறது.
இமைகள் நித்திரைக்கு கெஞ்சினாலும், இதயம் எழுத்தின் வசீகரிப்பால் விடிய விடிய வாசிக்க சொல்கிறது.
கால்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்தால்,கடமை சக்கரத்தை காலில் சேர்த்து கட்டி சுழல்கிறது. எனினும் இந்த கேட்பாரற்ற வேகமும் சுகமே. ஓடும் வரை ஓடுவோம், ஓய்வு வேண்டாம்,என்றேனும் ஒரு நிழலில் உறங்கி கொள்ளலாம். முழுதாய்.

Tuesday, August 3, 2010
வாழ்க்கை - ஒரு கிலோ 60ரூபாய்
1.There's no such thing as 'hard sell' and 'soft sell.' There's only 'smart sell' and 'stupid sell.'
2.When you reach for the stars you may not quite get one, but you won't come up with a handful of mud either..
-Leo Burnett
2.When you reach for the stars you may not quite get one, but you won't come up with a handful of mud either..
-Leo Burnett
Friday, July 30, 2010
சக்தியின் வரம் தரும் குபேரன்
பல்வேறு நேயர்கள் ஆசைப்பட்ட வரங்களை வாரி வழங்கிய குபேரன் விடை பெறுகிறான்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Season 2வில் சந்திப்போம்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Season 2வில் சந்திப்போம்.
Tuesday, July 27, 2010
நிழல் சொரியும் தருவின் வேர்
எல்லோர் மனதிலும் ஒரு மரம் வேர் விட்டுள்ளது. அம்மன் கோயில் வேப்பமரம், பள்ளிகூட பூச்சி மரம், ஏரிக்கரை பனைமரம், கம்பிளி ஊரும் முருங்கை மரம், புளியங்காய் அடிக்கப் போய் கால் உடைத்த மரம், கண்ணாம்பூச்சிக்கு ஆள் ஒளியும் அரச மரம், ஊஞ்சலாடும் ஆல மரம், இப்படி எத்தனையோ.என்னுள் இரு தென்னை மரங்கள் உள்ளன. ஐந்து வயதில், அதிலிருந்து எலுமிச்சை அளவில் ஒரு தென்னங்காய் என் உச்சி மண்டையில் சுர்ரென விழுந்தது. உடனே ஆப்பிள் விழுந்த நியூட்டன் போல என் ஞான கண் திறந்து , ஒரு யோசனை உதித்தது.
தரை எங்கும் அது போல் சிதறி கிடந்த காய்கள் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் பழைய கூடையில் ஒளித்து வைத்தேன். என்றேனும் அவை வளர்ந்து பெரிய இளநீராகும் என்று நம்பினேன்.ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஆரம்பித்த காய்கள், மூன்றாம் வகுப்பு வரை சென்றது.
ஒரு நாள் அப்பா அனைத்தையும் பார்த்து விட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீசி எரிந்து விட்டார். பிறகு வெகு காலம் அவை எங்கோ தூரத்தில் நான் இல்லாமல் அனாதையாக வளர்வதாய் நினைத்து புலம்புவேன்.
மரங்களுக்கு ஏன் அநாதை விடுதிகள் இல்லை என்றெல்லாம் யோசிப்பேன். அனைத்திலும் கொடுமையான விஷயம் பிறகு நடந்தது தான். அது என்னவென்றால்..
.
.
உதிர்ந்த காய் இளநீராய் மாறாது என உணர்ந்து கொள்ளும்படி நான் வளர்ந்துவிட்டேன்...
உதிர்ந்த காய் இளநீராய் மாறாது என உணர்ந்து கொள்ளும்படி நான் வளர்ந்துவிட்டேன்...
Sunday, July 18, 2010
வெடித்து சிதறிய கலக குரல்
Monday, July 12, 2010
ஓர் அறிக்கை
வெப்ப மண்டல வாழ்கையில் வளர்ந்த என்னால் உரக்க கூவி பேசாமல் இருப்பது கடினம். கடைசி பகலின் கடைசி மனிதன் சாவை முத்தமிடும் முன், உலகில் உருவான லட்சக்கணக்கான வார்த்தைகளையும் பசியுடன் பேசி தீர்ப்பதை போல் பேசி தீர்த்துவிடுவேன். சத்தமாய் பேசுவது என் மரபணு மூலக்கூறுகளில் ஒன்று. உறையும் மௌனங்களை உடைக்க மொழியோ, திரையோ, இயற்கையோ, உளவியலோ, எதோ ஓர் ஆயுதம் நாவில் சிக்கி விடும்.
ஆனால் அண்மை கால பெருவெளியில், என்னை நானே மௌனத்தின் குகைக்குள் நடுங்கும் கரத்தால் ஒளித்து, ஒளிந்து பதுங்கி கொள்கிறேன். ஏதேனும் சொல் யாரேனும் ஒருவரை கிழித்துவிட கூடாது என்பதால். உண்மையின் சுவை உவர்க்கும் என்பதால். ஆள்காட்டி விரல் வியர்க்கும் என்பதால். வார்த்தைகளின் வெப்பநிலை தாளாமல் சுற்றம் சுட்டுவிடும் என்பதால்.
வானம் பெரிது. யாவருக்காகவும் மழை பொழியட்டும். காற்றின் தாள்களில் நிரந்தரமாய் நிர்வாணம் எழுதிவிடுகிறேன்.எழுதுகோல் , எரிமை, எழுத்து, எழுதும் என் கரிய கரம் - என பல யாவும் அழிய கடவது. மௌநித்துவிடுகிறேன்.
மன்னியுங்கள். இது எனது தன்மை அல்ல. இது என்ன? உங்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் பேசி கொண்டே தான் இருப்பேன். வார்த்தைகளால் என் இரைப்பை நிரப்புவேன். இறுதி எச்சரிக்கை. உங்கள் செவிப் பறைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதி மனிதன் அலறிய முதல் வார்த்தையை இப்போது நான் ஓலமிட்டு கத்தப்போகிறேன்.

Subscribe to:
Posts (Atom)